தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை !

  டேவிட்   | Last Modified : 30 May, 2019 07:44 am
tribute-at-national-war-memorial-by-pm-modi

இன்று காலை 7.15 மணியளவில் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடத்தில் அஞச்லி செலுத்தியதைத் தொடர்ந்து, தேசிய போர் நினைவிடத்தில், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இன்று மாலை 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ள நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடத்தில் இன்று காலை 7.00 மணியளவில் பிரதமர் நரோந்திர மோடி, அஞ்சலி செலுத்தினார்.  முன்னதாக மகாத்மா காந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.   அமித் ஷா, ரவிசங்கர் பிரசாத், அருண் மெக்வால், பியூஷ் கோயல், ஸ்மிரிதி இரானி மற்றும் அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 


இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முப்படை வீரர்களின்  மரியாதையோடு பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். முப்படை அதிகாரிகளான பிபின் ராவத், சுனில் லன்பா, ஆர்.கே்.எஸ்.பதவ்ரியா ஆகியோரும் உடன் இருந்தனர். 

போர் நினைவு சின்னத்தை கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close