தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்களுக்கு தடை !

  டேவிட்   | Last Modified : 30 May, 2019 10:28 am
congress-has-decided-to-not-send-spokespersons-on-television-debates-for-a-month

தொலைக்காட்சி விவாதங்களில் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாத காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கவுள்ளார்.  இந்த தேர்தலில் குறைந்த இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, தோல்வி குறித்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில்,  தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close