சென்னை இசைக்கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற நீதிமன்றம் தடை!

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 12:38 pm
madras-hc-interim-ban-for-changing-sangeet-vidyalaya-to-delhi

சென்னையில் உள்ள சங்கீத் வாத்யாலயா பண்டைய இசைக்கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னையில் உள்ள சங்கீத் வாத்யாலயா பண்டைய இசைக் கருவிகள் அருங்காட்சியகத்தை கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையம் டெல்லிக்கு மாற்றுவதை எதிர்த்து, சுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கின் விசாரணை முடிவில், ஜூன் 10ம் தேதி வரை அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்றக்கூடாது என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

ஆசியாவிலே இசைக் கருவிகளுக்கென அருங்காட்சியம் உள்ள ஒரே இடம் சென்னை தான். 1957ம் ஆண்டு முதல் சென்னை அண்ணா சாலையில்  இசைக் கருவிகள் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close