பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்கள்!

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 01:58 pm
vips-participate-in-modi-swearing-in

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானி, பில்கேட்ஸ், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, விவேக் ஓபராய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். 

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இதனையடுத்து டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் சுமார் 8000 பேர் பங்கேற்கவுள்ளனர்.

விழாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுவின் தலைவர் முகேஷ் அம்பானி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் அவரது பயிற்சியாளர் கோபிசந்த், கிரிக்கெட் பிரபலங்கள் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், பாலிவுட் இயக்குநர்கள் சஞ்சய் பசாலி, கரண் ஜோகர், வீராங்கனைகள் பி.டி.உஷா, ஜிம்னாஸ்டிக் தீபா கர்மாகர், விவேக் ஓபராய், நடிகை கங்கனா ரனாவத், ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close