கா‌‌ஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

  டேவிட்   | Last Modified : 31 May, 2019 07:45 am
two-terrorists-killed-in-kashmir-baramulla

காஷ்மீரில் உள்ள சோபோர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

கா‌‌ஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவயையடுத்து,  பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து,தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில்,  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close