பிரதமர் நரேந்திர மோடி- இலங்கை அதிபர் சிறிசேன சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 11:33 am
prime-minister-narendra-modi-meets-sri-lankan-president-maithripala-sirisena-at-hyderabad-house

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று 2வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றார். தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நம் நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 

அந்த வகையில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில்  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, பல்வேறு பிரச்னைகள், திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close