மத்திய அமைச்சரை பாராட்டிய பிரபல பாடகர்

  ஸ்ரீதர்   | Last Modified : 31 May, 2019 02:09 pm
asha-bhosle-praises-union-minister-smriti-irani-for-helping-her

கூட்டத்தில் சிக்கி கொண்ட தன்னை பத்திரமாக மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியை பிரபல பாடகர் ஆஷா போன்ஸ்லே பாராட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிரம்மாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஆஷா போன்ஸ்லே கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின் புறப்பட்ட ஆஷா போன்ஸ்லே கூட்டத்தில் சிக்கி கொண்டார்.

அப்போது மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, ஆஷா போன்ஸ்லேவை பத்திரமாக மீட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு எனது நன்றி மற்றும் பாரட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close