2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று 2வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றார். தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நம் நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 'பிம்ஸ்டெக்'(BIMSTEC) அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களும் வந்திருந்தனர்.
இதையடுத்து இன்று டெல்லியில் 'பிம்ஸ்டெக்' தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பிம்ஸ்டெக் என்பது வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு அமைப்பு(BIMSTEC - Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation)
இந்த அமைப்பில் வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் உள்ளிட்ட அண்டை நாடுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in