ஜூன் 17 -இல் தொடங்குகிறது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர்!

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 07:39 pm
parliament-session-from-june-17

17-ஆவது மக்களவையின் முதல்  நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜூன் 17-ஆம் தேதி தொடங்கும்  நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 19-ஆம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு பதவியேற்ற நிலையில், 17-ஆவது மக்களவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

முன்னதாக, இன்று மாலை தனது அலுவல் பணிகளை தொடங்கிய பிரதமர்  நரேந்திர மோடி, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி முதல் கையெழுத்திட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close