எப்போதும் மக்களுக்கே முதலிடம்: பிரதமர் நரேந்திர மோடி

  ராஜேஷ்.S   | Last Modified : 31 May, 2019 09:27 pm
always-the-first-to-the-people-pm-modi

எப்போதும் மக்களுக்கே முதலிடம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்று கொண்டார். இதையடுத்து, அவரது தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.  

இக்கூட்டம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எப்போதும் மக்களுக்கே முதலிடம் அளிக்கப்படும் என்றும், பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், சிறு வணிகர்கள், கடை உரிமையாளர்கள் பயன்பெறும் வகையிலும் புதிய திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய  அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close