ஜம்மு - காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  ராஜேஷ்.S   | Last Modified : 31 May, 2019 10:02 pm
two-more-terrorists-killed-in-jammu-and-kashmir

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஏற்கெனவே 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் டிராகட் சுகன் என்ற பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் மேலும் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close