பயங்கரவாத இயக்கத்திலிருந்து விலகி வந்த இளைஞர்கள்

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 11:49 pm
5-youth-returned-their-home-from-terrorist-gang-in-jk

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், வெவ்வேறு பயங்கரவாத இயக்கங்களிலிருந்து விலகி, மீண்டும் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்துள்ளதாக அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு - காஷ்மீரில், பிரிவினைவாத அமைப்புகளும், பயங்கரவாதிகளும், அங்குள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அரசுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடச் செய்கின்றனர். அந்த வகையில், பல்வேறு பயங்கரவாத இயக்கங்களில் இருந்து வந்த, இளைஞர்கள் 5 பேர், அந்த இயக்கங்களில் இருந்து விலகி, தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்துள்ளனர். 

அவர்கள் பயங்கரவாதத்தை கைவிட பெரும் உதவியாக இருந்த அவர்களின் குடும்பத்தார், மாநில போலீசார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த ஐவர் யார் என்ற ரகசியம் வெளியிடாமல் காக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close