விமானப்படை தளபதியின் வீட்டின் முன் ரபேல் போர் விமானத்தின் மாதிரி வடிவம் நீக்கப்பட்டது

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jun, 2019 11:16 am
iaf-erects-rafale-replica-outside-air-chief-s-house-bang-opposite-congress-hq

டெல்லியில் உள்ள விமானப்படை தளபதி தனோவா வீட்டின் முன்பாக இருந்த ரபேல் போர் விமானத்தின் மாதிரி வடிவம் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக சுகோய் விமானத்தின் மாதிரி வடிவம் வைக்கப்பட்டுள்ளது

தேர்தல் பிரசாரத்தில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

பல்வேறு ஆண்டுகளாய் அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனமான ஹெச் ஏ எல் இருக்கும் போது தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை என்ன என்று அவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இந்நிலையில் இந்திய விமானப்படை தளபதி தனோவா வீட்டின் முன் ரபேல் போர் விமானத்தின் மாதிரி வைக்கப்பட்டுள்ளது.

தனோவின் வீட்டின் அருகே காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளதால் இது பெரும் கவனத்தை ஈர்த்து வந்தது.

இதையடுத்து ரபேல் போ ர் விமானத்தின் மாதிரி வடிவம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக சுகோய் விமானத்தின் மாதிரி வடிவம் வைக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close