உலகை சுற்றி வர போகும் "பைக் ராணிகள்"

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jun, 2019 04:58 pm
3-women-bikers-from-gujarat-to-ride-across-25-countries

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் இந்தியாவில் இருந்து லண்டன் வரை பைக்கில் பயணம் செய்யவுள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த சரிதா மேத்தா, ஜினால் ஷா மற்றும் ரூத்தல் படேல் என்ற 3 பெண்கள் பைக் மூலம் 25 நாடுகளில் பயணம் செய்து லண்டன் செல்கின்றனர்.

பெண்கள் பெருமை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயணத்தை வாரணாசியிலிருந்து வருகிற 5ம் இவர்கள் ஆரம்பிக்கின்றனர்.

இதற்கான விழாவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பைக் பயணத்தை தொடங்கி வைக்கிறார்.

அவர்கள் இந்தியா, நேபாள், பூடான், மியான்மர், லாவோஸ், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கசகஸ்தான், ரஷ்யா, லதிவியா, லிதேனியா, போலாந்து, செகஸ்லோவிஸ்கியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், மொராக்கோ மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பயணம் செய்து லண்டன் சென்றடைகின்றனர்.

இவர்கள் குழுவுக்கு பைக் ராணிகள் என்று பெயரிடப்பட்டுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close