டெல்லி: காவல் நிலையத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாம்பல்!

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jun, 2019 11:27 am
fire-incident-at-delhi-police-dumping-ground-in-sagarpur

டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சாம்பலாயின.

டெல்லியில் உள்ள சர்ஜார்பூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று நள்ளிரவு அப்பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களிலும் தீ பரவியது.

இதுகுறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சாம்பலானது. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close