குருவாயூர், திருப்பதி கோவிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 10:58 am
modi-visits-guruvayur-and-tirupati

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முறையே குருவாயூர் மற்றும் திருப்பதி கோவிலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து, கடந்த மே 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு மதியம் உச்சிகால பூஜையில் கலந்து கொள்ளும் அவர், மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார். 

தொடர்ந்து, ஜூலை 9ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலுக்கு செல்வதாக அம்மாநில பாஜக பொதுச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close