கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 6ம் தேதி தொடங்கும்- வானிலை மையம் தகவல்

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jun, 2019 02:39 pm
monsoon-delayed-may-now-hit-kerala-on-june-6

கேரளாவில் வருகிற 6ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
பருவ நிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை தாமதமாகியுள்ளது வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் கேரளாவிற்கு அதிக மழை பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டு 97 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் 97 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அதிகாரிகள் அது 8 சதவீதம் வரை கூடவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் வருகிற 6ம் தேதி அல்லது ஒன்றிரண்டு நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close