நாசவேலை செய்வோருக்கு "செக்"... 84 விமான நிலையங்களில் வருகிறது அதிநவீன ஸ்கேனர்கள் !

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jun, 2019 04:31 pm
84-airports-to-install-body-scanners-by-march-2020

வருகிற 2020 மார்ச் மாதத்துக்குள், நாட்டில் உள்ள 84 விமான நிலையங்களில், பயணிகள் உடலுக்குள் பதுக்கியிருக்கும் பொருட்களை கண்டுபிடிக்கும் நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது விமான பயணிகளின் உடமைகள் "மெட்டல் டிடெக்டர்" கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும், பயணிகள் அபாயகரமான பொருட்களை உடல்களில் பதுக்கி வைத்துள்ளார்களா என சந்தேகம் ஏற்பட்டால் தனியறையில் அவர்களை சோதனை செய்யும் வழக்கம் தான் தற்போது நடைமுறையில் உள்ளது.

இதற்கு மாற்றாக வருகிற 2020 மார்ச் மாதத்துக்குள் நாட்டிலுள்ள 84 விமான நிலையங்களில் நவீன ஸ்கேனர்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளை சோதனை செய்வது எளிமையாகிவிடும் எனக் கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close