சைக்கிளில் சென்று பதவியேற்ற மத்திய அமைச்சர்!

  அனிதா   | Last Modified : 03 Jun, 2019 11:08 am
a-minister-gone-on-a-bicycle-and-take-charge

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷ்வர்தன் இன்று சைக்கிளில் சென்று அமைச்சராக பொற்றுப்பேற்றுக்கொண்டார். 

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த 30ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிராமணம் செய்துவைத்தார். 

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், உலக சைக்கிள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு சைக்கிளில் சென்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close