சமாஜ்வாதி கட்சியுடன் இனி கூட்டணி இல்லை- மாயாவதி முடிவு

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jun, 2019 04:52 pm
mayawati-blames-akhilesh-yadav-for-uttar-pradesh-poll-drubbing

மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததற்கு அகிலேஷ் யாதவின் மோசமான செயல்பாடு தான் காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி குறித்து மாயாவதி விவாத்தார். அப்போது பேசிய அவர், மக்களவை தேர்தல் தோல்விக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மோசமான செயல்பாடு தான் காரணம் என்றும் அவர் யாதவ சமுகத்தினரின் வாக்குகளை கவரத் தவறி விட்டார் என்றார்.

மேலும் அவர் தனது மனைவியான டிம்பிள் யாதவையும் வெற்றி பெற செய்ய முடியவில்லை என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close