நீர்வரத்து இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர்: கர்நாடகா அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2019 08:33 pm
if-the-inflow-of-water-to-tamil-nadu-karnataka-notice

நீர்வரத்து இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘கர்நாடகாவில் உள்ள அணைகளில் தற்போது 134 டிஎம்சி நீர்தான் உள்ளது. போதிய நீர்வரத்து இருந்தால் தமிழகத்திற்குரிய உரிய தண்ணீரை வழங்க முடியும். மழை இல்லை என்றாலும் விகிதாசார அடிப்படையில் தமிழகத்திற்கு நீர் வழங்கப்படும்’ என்றார்.

மேலும், மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கைக்கு ஒப்புதல் பெற கர்நாடக எம்பிக்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என்றும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close