கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அம்மாநிலத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார்.
மேலும் புனேவிலிருந்து 6 சிறப்பு மருத்துவ அதிகாரிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in