ராபர்ட் வாத்ரா வழக்கு- விசாரணை அதிகாரி நீக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jun, 2019 03:23 pm
trouble-mounts-for-vadra-ed-officer-probing-money-laundering-case-removed-over-laxity-in-investigation

ராபர்ட் வத்ரா மீது அன்னிய செலவாணி முறைகேடு வழக்கில் விசாரணை அதிாரியாக இருந்த ராஜிவ் ஷர்மா  நீக்கப்பட்டுள்ளார்.

ராபர்ட் வத்ரா மீதான அன்னிய செலவாணி வழக்கை அமலாக்கத்துறையின் தலைமை புலனாய்வு துறை அதிகாரி ராஜிவ் ஷர்மா விசாரித்து வந்தார்.

அவர் வழக்கை தாமதப்படுத்தம் நோக்கிலும், ராபர்ட் வாத்ராவை வழக்கிலிருந்து தப்ப வைக்கும் வகையிலும், வழக்கை முறைப்படி விசாரிக்காமல் பல விஷயங்களை தள்ளிப்போட்டு வந்தது அமலாக்கத்துறைக்கு தெரிய வந்தது. அதையடுத்து ராஜிவ் ஷர்மாவை, ராபர்ட் வாத்ரா மீதான வழக்கு விசாரணையிலிருந்து நீக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக மகேஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close