மரக்கன்றுகளை நடுங்கள்- உலக சுற்றுசூழல் தினத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jun, 2019 01:11 pm
pmmodi-living-in-harmony-with-nature-will-lead-to-better-future

நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்கு, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் உலக சுற்றுசூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரமதர் மோடி மரக்கன்றுகளை நட்டு, பூமியை பசுமையாக வைத்துக்கொள்ளும்படி டிவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இயற்கையை கடவுளாக வணங்கும் சமுதாயத்தில் பிறந்து, வளர்ந்த அனைவரும் பூமியை தூய்மையான கோளாக உருவாக்க உறுதிகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

மழைக்காலம் நெருங்குவதால், மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல், அவை வளர்வதற்கான பராமரிப்பு வழிகளையும் கண்டறிய வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close