மும்பை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 07:27 pm
alert-in-mumbai-explosives-found-from-express-train-with-note

மும்பை குர்லா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பா.ஜ., அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்த துண்டு காகிதமும் பறிமுதல் செய்யப்பட்டதால், அது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல குர்லா ரயில் நிலையத்தில், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா ரயில் நிலையத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், சந்தேகப்படும் படியான பொருள் கிடைத்தது. 

அதை பறிமுதல் செய்த போலீசார், அது வெடி பொருள் என்பதை உறுதி செய்தனர். சக்திவாய்ந்து ஜெல்லட்டின் குச்சிகள், வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், பா.ஜ., அரசுக்கு நாங்கள் யார் என்பதை விரைவில் காண்பிப்போம் என்ற வாசகம் அடங்கிய துண்டு காகிதமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close