சதம் அடித்து சவுத் ஆப்பிரிக்காவை காலி செய்த ரோஹித் சர்மா

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 11:16 pm
rohit-starts-the-world-cup-with-century

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 122 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், இந்தியாவுக்கான முதல் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்றைய போட்டியில், முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா, 228 என்ற சுலப இலக்கை நிர்ணயித்தது. 

இந்திய பவுலர்களின் அசாத்திய முயற்சியின் பலனாய் இந்த இலக்கை நமக்கு கிடைத்தது எனலாம். அதே சமயம், துக்க ஆட்டகாரரான ஷிகர் தவான், விரைவிலேயே அவுட்டாகி, இந்திய ரசிகர்களை கலங்கடித்தார். அவரை தொடர்ந்து, கேப்டன் கோலியும் சோபிக்கவில்லை. 

இதற்கிடையே, சவுத் ஆப்பிரிக்க வீரர்களின் பந்துகளை சிக்சர், போர் என அடித்து, அந்த அணி வீரர்களை கதி கலங்க செய்தார், ரோஹித் சர்மா. 144 பந்துகளை சந்தித்த அவர், 13 பவுண்டரி, 2 சிக்சர் அடித்து, பந்துகளை பறக்கவிட்டு, 122 ரன்கள் எடுத்தார். 

இவரின் அதிரடியால், இந்தியா தன் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே, சதம் அடித்து, தன் அதிரடி  கணக்கை துவக்கியுள்ளார் ரோஹித் சர்மா. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close