வாக்குப்பதிவு இயந்திரம் மீது பொய் புகார் கூறும் வாக்காளர்களுக்கு தண்டனை?

  டேவிட்   | Last Modified : 06 Jun, 2019 07:41 am
punishment-for-false-complaint-sunil-arora

வாக்குப்திவு இயந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் கமி‌‌ஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 

தேர்தலின்போது, தங்களது ஓட்டு தவறாக பதிவாகி விட்டதாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது வாக்காளர்களில் சிலர் புகார் கூறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுபோன்று புகார் கூறும் வாக்காளர்கள், தேர்தல் நடத்தை விதிகள் 49எம்ஏ பிரிவின்படி, சோதனை ஓட்டு போட அனுமதிக்கப்படுவர். இந்த புகார் தவறானது என தெரியவந்தால், இந்திய தண்டனை சட்டம் 177-வது பிரிவின்படி பொய் புகார் அளித்தவர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். 

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, இந்த தண்டனை விதிமுறை அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் கமி‌‌ஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close