பாதுகாப்பு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அமைச்சரவைக்குழு !

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 09:25 am
updated-ministers-council-by-central-government

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்காகவும், 2 புதிய அமைச்சரவை குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (புதன்கிழமை) அமைத்துள்ள நிலையில், 8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான கேபினட் கமிட்டி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அமைச்சரவை குழு என 2 குழுக்கள் பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளன.  இரு குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஐந்து உறுப்பினர்கள் கொண்ட முதலீட்டுக்கான அமைச்சரவை குழுவில், பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி, பியூஷ் கோயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  பத்து பேர் கொண்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான குழுவில், பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், மகேந்திர நாத் பாண்டே, சந்தோஷ் குமார் கங்வார், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் உள்ளனர். 

இந்நிலையில், 8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு, பொருளாதாரம், பாராளுமன்றம், அரசியல் விவகாரம், முதலீடு, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு உள்பட 8 அமைச்சரவை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில் பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close