ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

  டேவிட்   | Last Modified : 07 Jun, 2019 11:22 am
jammu-kashmir-4-killed-in-encounter

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் லசிபோரா பகுதியில் பதுங்கியிருந்த  4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டத்தின் லசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து,  பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியை மேற்கொண்டனர் . அப்போது பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர்.  இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து மூன்று ஏ.கே ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close