ஆந்திரா அமைச்சரவையில் 5 துணை முதலமைச்சர்கள் நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில், அமராவதியில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அமைச்சரவையில் 5 துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என 24 பேரை நியமிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் நடிகை ரோஜாவுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
newstm.in