வாஜ்பாய் வசித்த வீட்டில் குடியேறும் அமித்ஷா

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Jun, 2019 12:47 pm
amit-shah-to-be-allocated-late-pm-atal-bihari-vajpayee-s-bungalow-at-krishna-menon-marg

டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீீடு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவியேற்று கொண்டார்.

அவருக்கு மத்திய டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்து வந்த கிருஷ்ண மேனன் மார்க் வீீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் 2004ம் ஆண்டு குடியேறிய வாஜ்பாய் தனது குடும்பத்துடன் 14 ஆண்டுகள் வசித்து வந்தார். அவரது இறப்பிற்கு பிறது அவரது குடும்பத்தினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அங்கிருந்து வெளியேறினர்.

இதையடுத்து அந்த வீட்டில் மராமத்து பணிகள் நடந்து வருவதால் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் அங்கு குடியேறுவார் என்று கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close