தல வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Jun, 2019 02:51 pm
3-arrested-for-burglary-at-ms-dhoni-s-house-in-noida

உத்தரப்பிரதேசத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தோனியின் வீட்டில் சில மராமத்து வேலைகள் நடந்து வந்தன.

அப்போது அவரது வீட்டில் இருந்த எல்இடி டிவி காணாமல் போனது. இதே போல் அப்பகுதியில் இருந்த மேலும் சில வீடுகளிலும் திருட்டுகள் நடைபெற்றன.

இது குறித்த புகாரின் பேரில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

அப்போது அந்த 3 பேரும் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது வீட்டிற்கு அருகே உள்ள சில வீடுகளிலும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 9 பேட்டரிகள், 3 இன்வெர்ட்டர்கள், 5 லேப் டாப்கள், 5 எல்இடி டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று நொய்டா போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close