பார்லிமென்ட் அருகே தீ விபத்து: 50 பேர் உயிருடன் மீட்பு

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2019 06:47 pm
fire-broke-out-near-parliament-building

டெல்லியில் பார்லிமென்ட் கட்டிடம் அமைந்துள்ள தெரு அருகே உள்ள தனியார் குடோனில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் சிக்கிய, 50 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். 

டெல்லியில் பார்லிமென்ட் கட்டிடம் அமைந்துள்ள தெரு அருகே, தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இதில், இன்று மதியம் திடீரென தீ பிடித்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென பரவியதால், மக்கள் பீதியடைந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சில மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். 

குடோனில் சிக்கிய, 50 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். இன்னும் அனல் அடங்காததால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர், குடோனுக்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள், தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பார்லிமென்ட் அருகே இந்த தீ விபத்து நடந்ததால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close