சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2019 08:02 pm
crpf-jawans-lifts-a-boy-up-to-8-kilo-meters-and-gave-him-treatment

சத்தீஸ்கரில், மருத்துவ வசதி இல்லாததால், மஞ்சள் காமாலையால் அவதிப்பட்ட சிறுவனை, 8 கி.மீ., துாரம் கட்டிலில் சுமந்து சென்று, சிகிகச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு கிராம மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். 

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், கொண்டாசாவில் கிராமத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த கிராமத்தில் மருத்துவ வசதி இல்லாததால், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட, 13 சிறுவன் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தான். 

 

— ANI (@ANI) June 7, 2019

 

அந்த சிறுவனை கயிற்று கட்டிலில் அமரவைத்து தோளில் சுமந்து சென்ற சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 8 கி.மீ., துாரம் நடந்தே சென்று, அவர்களின் முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவரிடம் சிறுவனை காண்பித்து, அவனுக்கு சிகிச்சை அளிக்கச் செய்தனர். 

தற்போது அந்த சிறுவனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளதாகவும், சிஆர்பிஎப் வீரர்களின் உதவியாலேயே அந்த சிறுவன் உயிர் பிழைத்திருப்பதாகவும், கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். வீரர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close