நாளை இலங்கை செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி !

  டேவிட்   | Last Modified : 08 Jun, 2019 07:54 am
pm-modi-going-to-sri-lanka

இன்று மாலத்தீவு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து நாளை இலங்கை செல்லவிருப்பதால் இலங்கையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுன் 8) மாலத்தீவு செல்கிறார். அங்கிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்று, அதிபர் சிறிசேனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன் பின்னர் அவர் டெல்லிக்கு திரும்புகிறார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.  காலை 11 மணியில் இருந்து 12 மணிவரை, இலங்கை அதிபரின் செயலகம் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்படும் என்றும், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் செல்பவர்கள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னதாகவே பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close