அமித் ‌ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: டெல்லி போலீஸ்

  டேவிட்   | Last Modified : 08 Jun, 2019 08:31 am
tight-security-for-amit-shah

மத்திய உள்துறை அமைச்சர் பதவி மிகவும் முக்கியத்துவம்  வாய்ந்தது என்பதால்,  அமித் ‌ஷாவின் பாதுகாப்பு குறித்து டெல்லி போலீசார் ஆய்வு செய்து, அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். 

இதையடுத்து, டெல்லியில் உள்ள அமித் ‌ஷா வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு படையினரை டெல்லி போலீஸ் அனுப்பி வைத்ததோடு,  இசட் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு படையின் கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இதனிடையே, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டுக்கும், துணை ராணுவப்படை பாதுகாப்பு அளித்து வருகிறது. விரைவில், இந்த பாதுகாப்பு பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close