கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 500 ரூபாய் அபராதம்- ஏன் தெரியுமா?

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jun, 2019 12:29 pm
virat-kohli-fined-rs-500-for-washing-car-with-drinking-water

கார்களை சுத்தம் செய்ய குடிநீரை பயன்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வீடு டெல்லியில் உள்ள குர்கானில் உள்ளது. அவரது வீட்டில் 6க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன.

இந்நிலையில் வீராட் கோலி வீட்டில் வேலை செய்யும் வேலையாள் விராட் கோலிக்கு சொந்தமான கார்களை குடிதண்ணீர் மூலம் சுத்தம் செய்வதாக புகார் செய்யப்பட்டது.

இது குறித்து விராட் கோலியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் மாநகராட்சிக்கு புகார் ஒன்றை அளித்தார்.

அதில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வீட்டில் உள்ள கார்கள் குடிநீர் மூலம் சுத்தப்படுத்தப்படுவதாகவும், இதனால் ஆயிரக்கணக்கில் குடிநீர் வீணாவதாகவும். தெரிவித்திருந்தார்.

மாநகராட்சி நிர்வாகம் இந்த புகாரை உறுதி செய்தது. இதையடுத்து  வீராட் கோலிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close