ஜார்கண்ட்:  21-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் யோகா பயிற்சி !

  டேவிட்   | Last Modified : 09 Jun, 2019 07:22 am
yoga-coaching-in-ranchi-headed-by-pm-modi

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள யோகா பயிற்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர். 

2014-ம் ஆண்டு ஐ.நா. சபையில் சர்வதேச யோகா தினத்தை அறிவித்து கொண்டாட வேண்டியதின் அவசியத்தை பிரதமர் மோடி  வலியுறுத்தினார். இதனையடுத்து  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது. 

அதன்படி நிகழாண்டில் வரும் 21-ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெறவுள்ள யோகா தின கொண்டாட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். இதில் 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்ய உள்ளனர்.  அன்றையத் தினமே டெல்லியிலும் யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close