ஜூலை 1 முதல் விமான டிக்கெட் கட்டணம் உயர்வு !

  டேவிட்   | Last Modified : 09 Jun, 2019 07:32 am
hike-of-flight-fare-from-1st-july

ஜூலை 1ஆம் தேதி முதல் விமான டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வருவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

விமான பயண பாதுகாப்பு கட்டணத்தை உயர்த்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதையடுத்து, உள்நாட்டு பயணிகளுக்கு தற்போதைய பாதுகாப்பு கட்டணம் ரூ.130-ஐ ரூ.150 ஆகவும், வெளிநாட்டு பயணிகளுக்கு 3.25 டாலரில் இருந்து 4.85 டாலராக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
இந்த மாற்றத்தால், விமான டிக்கெட் கட்டணம் சிறிது உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close