காணாமல் போன விமானம்- தகவல் தந்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jun, 2019 09:23 am
iaf-announces-rs-5-lakh-award-for-info-on-missing-an-32-plane

காணாமல் போன விமானப்படையின் விமானத்தை பற்றி தகவல் தெரிவித்தால் 5 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

கடந்த 3 ம் தேதி அசாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 என்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் காணாமல் போனது.

அருணாச்சல பிரதேசம் மெச்சுகா என்ற இடத்தின் மேல் பறந்து கொண்டிருந்த போது காணாமல் போனது. அந்த விமானத்தில் விமான சிப்பந்திகள் உள்பட 13 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் காணாமல் போன விமானம் குறித்து தகவல் தந்தால் 5 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close