டெல்லி- கம்பளியில் சுற்றப்பட்ட தலையில்லா பெண்ணின் உடல்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jun, 2019 11:07 am
woman-s-headless-body-wrapped-in-blanket-found-near-delhi-metro-station

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே தலையில்லா பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி ஜஹாங்கிர்புரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே கம்பளியால் சுற்றப்பட்ட ஒரு உடல் கிடந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கம்பளியை பிரித்து பார்த்த போது தலையில்லா ஒரு பெண்ணின் உடல் இருந்தது.

மேலும் அந்த பெண் கொலை செய்யப்பட்டு 3 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்றும் அந்த உடல் அழுகும் நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த சடலம் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close