நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய குடியிருப்புகள் ரெடி !

  டேவிட்   | Last Modified : 10 Jun, 2019 08:40 am
new-mp-quarters-are-ready-in-delhi

நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்களுக்கு டெல்லியில் 36 புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய எம்.பி.க்கள் குடியிருப்பதற்காக, டெல்லியில் வடக்கு அவென்யு பகுதியில் 36 புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கடந்த 2017 அக்டோபர் மாதம் தொடங்கிய கட்டுமானப்பணி, தற்போது நிறைவடைந்துள்ளது. 
 
நான்கு படுக்கையறை, நவீன சமையல் அறை, லிப்ட், சோலார் பேனல்கள், எல்.இ.டி. விளக்குகள், அலுவலக பகுதி, அடித்தள கார் நிறுத்தம் உள்ளிட்ட நவீன வசதிகள் அடங்கிய இந்த கட்டடம் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது,  இம்மாத இறுதிக்குள் இக்குடியிருப்புகள் மக்களவை செயலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை சுமார் 350 எம்.பி.க்கள் தற்காலிகமாக தங்குவதற்கான மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close