காஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 12:01 pm
south-kashmir-two-militants-killed-in-shopian-gunfight-internet-suspended

காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் அவ்னீரா(Awneera) என்ற பகுதிக்கு அருகே தீவிரவாதிகள் நுழைந்ததாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினரும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் அப்பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இதுதவிர, பாதுகாப்பு காரணங்களுக்காக தெற்கு காஷ்மீர் பகுதியில் இன்டர்நெட் சேவையானது துண்டிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close