மக்களவை இடைக்கால சபாநாயகராக விரேந்திர குமார் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 12:57 pm
bjp-mp-dr-virendra-kumar-to-be-the-protem-speaker-of-the-17th-lok-sabha

17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மத்தியப் பிரதேச பாஜக எம்.பி விரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

17வது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, கடந்த மே 30ஆம் தேதி 2வது முறையாக  நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றார். தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து மே 31ம் தேதி முதல் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. 

இதையடுத்து 17வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, ராதா மோகன் சிங்,  மத்திய பிரதேச பாஜக எம்.பி விரேந்திர குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. 

இதையடுத்து, 17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மத்தியப் பிரதேச பாஜக எம்.பி விரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்ஹர் மக்களவைத் தொகுதியில் இருந்து 6 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close