காணாமல் போன ஏ.என்.32 ரக போர் விமானம் கண்டுபிடிப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 03:39 pm
iaf-sources-wreckage-of-the-missing-an-32-aircraft-has-been-found-by-mi-17-helicopters-of-the-indian-air-force

கடந்த வாரம் காணாமல் போன, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் கடந்த ஜூன் 3ம் தேதி பகல் 12.25 மணிக்கு அசாம் மாநிலம், ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது. மிகவும் சிறிய அளவிலான இந்த விமானத்தில் 5 பயணிகள் உள்பட 13 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மென்சுகா என்ற பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 

இந்நிலையில், விமானத்தின் பாகங்கள் உடைந்த நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சியாங் மாநிலம் கட்டி என்ற கிராமத்தில் கிடப்பதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஐ -17 ஹெலிகாப்டர் மூலமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், விமானத்தின் பாகங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close