குஜராத்தை மிரட்டும் ‛வாயு’ புயல்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 04:43 pm
cyclone-vayu-will-hit-coastal-gujarat

அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல், வரும் 13 அல்லது 14ம் தேதி குஜராத் மாநில கடற்கரையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ராஜ்கோட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறவிக்கப்பட்டுள்ளது. 

அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல், இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகிறது. அதிதீவிர புயலாக மாறி, குஜராத்தின் கடற்கரை பகுதியிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 13 அல்லது 14ம் தேதிகளுக்கு இடையே புயல் எப்போது வேண்டுமானாலும் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, சவுராஷ்டிரா மற்றும் கட்ஜ் பகுதிகளில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதையடுத்து, ராஜ்கோட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close