அமித் ஷா அதிரடி உத்தரவு: குஜராத் விரைந்தது பேரிடர் மீட்புப் படை

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 04:56 pm
cyclone-vayu-amit-shah-ordered-ndrf-arrives-gujarat

குஜராத் மாநிலத்தில் 13 - 14ம் தேதி இடையே வாயு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, அந்த மாநிலத்தில் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். 

வாயு புயல் கரையை கடக்கும் போது, குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா, கட்ஜ் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்திக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், அந்த பகுதிகள் மட்டுமின்றி, குஜராத்தின் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் படி, மத்திய துணை ராணுவப்படைக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து, ராணுவம், துணை ராணுவம் மற்றும் பேரிடம் மீட்பு படையினர், குஜராத் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். ராஜ்கோட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புயலின் தாண்டனம் எவ்வளவு கோரமாக இருந்தாலும், எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் இருக்க போதிய முன்னெச்சிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக, அமித் ஷா தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close