கங்கை நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சோகம்!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 05:30 pm
7-youths-drown-in-ganga

உத்தரபிரதேச மாநிலத்தில் குளிக்கச் சென்ற போது, கங்கை நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா(Amroha) நகரம் பிரஜ்ஹாட்(Brajghat) என்ற பகுதியில் உள்ள கங்கை நதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் குளிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்த போது, இருவர் நீரில் மூழ்கினர். தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். 

இதனைக்கண்ட மற்றவர்கள் அவர்கள் ஆற்றுக்குள் மூழ்கிய பகுதிக்குச் சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் அனைவருமே நீரின் சூழலில் மாட்டிக்கொண்டனர். இவர்கள் 3 பேர் கடுமையாக போராடி கரையை வந்தடைந்தனர். எஞ்சியோரை தேடும் பணி நடைபெற்ற நிலையில், 7 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் 7 பேருமே இளைஞர்கள். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கங்கை ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close