குடிநீரும் மக்களின் அடிப்படை உரிமை: உயர்நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 06:04 pm
drinking-water-and-basic-rights-of-the-people-hc

குடிநீர் என்பதும் மக்களின் அடிப்படை உரிமையே என்று, வழக்கு ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று இன்று விசாரனைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டப்படி குடிநீர் என்பதும் மக்களின் அடிப்படை உரிமையே என்று கருத்து தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, பிதார் மாவட்டத்தில் இரண்டு வாரங்களில் குடிநீர் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close