சிறுபான்மை சமூக மாணவர்கள் 5 கோடி பேருக்கு கல்வி உதவித்தொகை : மத்திய அரசு திட்டம்!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 08:21 pm
modi-government-announces-massive-scheme-of-scholarships-to-5-crore-minority-students

பல்வேறு சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் 5 கோடி பேருக்கு, அடுத்த ஐந்தாண்டுகளில் பலவிதமான கல்வி உதவித்தொகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்துள்ளார்.

மௌலானா ஆசாத் கல்வி நிறுவனத்தின் 65 -ஆவது பொதுக் குழு கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய அமைச்சர் நக்வி இவ்வாறு கூறினார். மேலும், இந்த உதவித்தொகைகளை பெறவுள்ளவர்களில் 50 சதவீதம் பேர் மாணவிகள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close